Ad Code

Responsive Advertisement

வேதியியல் தேர்வில் தவறான கேள்விகள்: உரிய மதிப்பெண் வழங்க உத்தரவு

பிளஸ் 2-க்கு 23ம் தேதி வேதியியல் பாடத் தேர்வு நடந்தது. அதில் ஏ வகை கேள்வித்தாளில் ஒரு மதிப்பெண் கேள்வியில் 10, 22வது  கேள்விகள் பிழையாக கேட்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக 10வது கேள்வியில் யுரேனியம் அணுத்துகள், ஈயத்துடன் வேதியியல்  வினைபுரியும்போது வெளியாகும் ஆல்பா, பீட்டா கதிர்கள் எண்ணிக்கை தொடர்பாக கேட்கப்பட்டு இருந் தது.
அதில் ஈயத்தின் மதிப்பு 206 என்பதற்கு பதிலாக 108  என்று குறிப்பிடப் பட்டு இருந்தது. அதனால் அந்த கேள்வியின் விடைக்கு சரியான கணக்கீடு கிடைக்காமல் மாணவர்கள் திணறினர்.

அதேபோல 22வது கேள்வியில் வெப்ப இயக்கவியல் தொடர்பாக கொடுக்கப்பட்ட விடையில் 0.032 என்று கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கொடுக்கப்பட்ட 4  விடைகளும் தவறாக கொடுக்கப்பட்டு இருந்தன. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. வேதியியல் பாடத்தின் விடைத்தாள் திருத்தும்  ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை தற்போது ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 10, 22வது கேள்விகளுக்கு விடை எழுத முற்பட்டுள்ள மாணவர்களுக்கு அந்த  கேள்விகளுக்கு உரிய மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement