Ad Code

Responsive Advertisement

'ஆன் - லைனில்' விடைத்தாள் நகல்: கல்வி துறை அதிரடி திட்டம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், திருத்தப்பட்ட விடைத்தாள் நகல்களை, 'ஆன் - லைன்' மூலம் பார்க்கும் வசதியை ஏற்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 5ல் துவங்கி, 31ம் தேதி முடிந்தது; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 19ம் தேதி துவங்கி நடந்து வருகிறது; வரும் 10ம் தேதி முடிய உள்ளது. இந்த ஆண்டு பொதுத்தேர்வில், பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. தேர்வு முடிவு வெளியானதும், மேற்படிப்புக்காக, கல்லூரிகளுக்கு உடனே விண்ணப்பிக்கும் வகையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதனால், மாணவ, மாணவியர் மதிப்பெண் சான்றிதழுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இன்னும் கூடுதல் வசதியாக, மாணவ, மாணவியர் மறுகூட்டல் மற்றும் மறு ஆய்வுக்காக, விடைத்தாள்களின் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் போதும், அவர்களுக்கு தாமதமின்றி நகல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த ஆண்டு, 'ஆன் - லைன்' மூலம், விடைத்தாள் நகல் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கான முயற்சிகளை, தேர்வுத் துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகம் இணைந்து மேற்கொண்டு வருவதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement