Ad Code

Responsive Advertisement

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்! பிழை இருந்தால் திருத்தி கொள்ள வாய்ப்பு

 வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது குறித்த சிறப்பு முகாம், கோவையிலுள்ள ஓட்டுச்சாவடிகளில் இன்று நடக்கிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களையும் மேற்கொள்ளலாம்.


வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் திட்டத்தை, இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 3 முதல் தேசிய அளவில் நடைமுறைபடுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களையும் மேற்கொள்ளலாம்.
ஆதார் எண் பெறுவதற்கும், வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதற்கும் மார்ச் 25 முதல் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் வீடு வீடாக சென்று சரிபார்த்து விபரங்களை சேகரித்து வருகின்றனர்.இன்று, ஏப்., 26, மே, 10, மே24 உள்ளிட்ட நான்கு ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அந்தந்த பகுதி ஓட்டுச்சாவடிகளில், மக்கள் ஆதார் எண் விபரங்களை தெரிவித்து, திருத்தங்களை செய்து பயன்பெறலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பெயரை நீக்கம் செய்யவும் இம்முகாமில் மனு செய்யலாம்.

* வாக்காளர் பட்டியலில் உள்ள விபரங்களை திருத்தம் செய்ய, படிவம், 8 பூர்த்தி செய்து வயதுக்கு ஆதாரமாக பிறப்பு சான்று, பிறந்த தேதி, குறிப்பிடப்பட்ட பள்ளி மதிப்பெண் பட்டியல், பான் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கடிதம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலையும் ஆதாரமாக இணைக்க வேண்டும்.

* இருப்பிட முகவரி திருத்தம் செய்ய, வங்கி கணக்கு, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், தொலைபேசி கட்டண பட்டியல், மின் கட்டண பட்டியல், எரிவாயு பட்டியல், வாடகை ஒப்பந்தம் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை, பூர்த்தி செய்த படிவத்துடன்(8) ஆதாரமாக இணைக்க வேண்டும்.

* இறந்தவரின் பெயரை நீக்கம் செய்ய, இறப்பு சான்றுடன் பூர்த்தி செய்த படிவத்துடன்(7), ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் தாக்கல் செய்யலாம்.

* வேறு இடம் பெயர்ந்தவர் பெயரை நீக்கவும், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பெயரை நீக்கவும் சரியான காரணத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் (7) தாக்கல் செய்யலாம். வாக்காளர்கள் தாமாகவே முன்வந்து, இந்திய தேர்தல் கமிஷனின் இணையதளம், எஸ்.எம்.எஸ்., இமெயில், 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், கோவை மாவட்டத்தில் செயல்படும் பொது சேவை மையம் வாயிலாக தொடர்பு கொண்டு விபரங்களை பதிவு செய்யலாம்.

பணிகள் 'ஜரூர்'
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் திட்டம் குறித்த ஆய்வு கூட்டம், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது குறித்து, இன்று நடக்கும் சிறப்பு முகாம், ஓட்டுச்சாவடிகளின் நிலை குறித்த அலுவலர்கள் மூலம் பெறப்படும் விபரங்களை இணைப்பது தொடர்பான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. சிறப்பு பார்வையாளர் பாலச்சந்திரன், கோவை, வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ஆதார் எண் விபரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியை ஆய்வு செய்தார். மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இப்பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement