மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே பாடநூல் விற்பனை செய்யப்படும் என்று இயக்குனர் பிச்சை தெரிவித்துள்ளார். தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் பிச்சை நேற்று வெளியிட்ட அறிக்கை:
மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளில் 2015,16ம் கல்வி ஆண்டில் பிளஸ்2 பயில உள்ள மாணவர்களுக்கு, பிளஸ் 2 பாடநூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் சேவை கழகத்தால் அச்சிடப்பட்டு அந்தந்த வட்டார அலுவலகங்களில் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மெட்ரிகுலேசன் மேல்நிலைலப் பள்ளி முதல்வர்கள் தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட வட்டார அலுவலகத்தில் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பாடநூல்களுக்குண்டான தொகையினை வங்கி வரைவோலையாக செலுத்தி, விற்பணை பிரதியை பெற்றுக் கொள்ளவும், அதனை உடனடியாக மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும். எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகள் பயிலும் பள்ளிகளிலேயே பிளஸ் 2 பாட நூல்களை விற்பனை பிரதியாக பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை