Ad Code

Responsive Advertisement

ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு

'கோடை விடுமுறைக்குப் பின், ஜூன், 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன் அறிவித்து உள்ளார். பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 5ம் தேதி துவங்கி, 31ம் தேதி முடிந்தது. ??ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 19ம் தேதி துவங்கி, கடந்த, 10ம் தேதி முடிந்தது.
மற்ற வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள், இம்மாத இறுதிக்குள் முடிகின்றன. பின், மே இறுதி வரை, கோடை விடுமுறை. இதன்பின், 2015 - 16ம் கல்வி ஆண்டு, வரும், ஜூன் 1ம் தேதி துவங்கும் எனவும், அன்று, அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் எனவும், பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிவிப்பு:

அனைத்து உயர்நிலை, மேல்நிலை, தொடக்க, நடுநிலை பள்ளிகள், கோடை விடுமுறை முடிந்து, வரும், ஜூன் 1ம் தேதி, மீண்டும் திறக்கப்பட வேண்டும். 2015 - 16ம் கல்வி ஆண்டுக்கான நாட்காட்டி, உரிய விவரங்களுடன், தனியாக அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார். கடந்த, 2012 - 13ம் கல்வி ஆண்டு, கோடை வெப்பம் காரணமாக, பள்ளி திறப்பது, ஜூன் 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு, கோடை வெப்பம் சுட்டெரிப்பதால், பள்ளி திறப்பது தள்ளிப்போகுமா என, பெற்றோர் எதிர்பார்த்த நிலையில், பள்ளி திறப்பு தேதியை, திட்டவட்டமாக இயக்குனர் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement