Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 பொருளாதார தேர்வு தவறான வினாக்கள்: மதிப்பெண் வழங்க ஐகோர்ட் உத்தரவு

 பொருளாதார தேர்வில் தவறாக இடம் பெற்ற வினாக்களுக்கு 2 மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தரப்பு உறுதியளித்ததால், வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை பைசல் செய்தது.

தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மதுரை மாவட்டத் தலைவர் சந்திரன் தாக்கல் செய்த மனு: மார்ச் 27 ல் பிளஸ் 2 பொருளாதார தேர்வு நடந்தது. பிரிவு 'ஏ' யில் (தமிழ் வழி) ஒரு மதிப்பெண் வினாக்கள் (18, 20) பதில் அளிக்க முடியாத வகையில் தவறாக கேட்கப்பட்டுள்ளன. 'புளுபிரின்ட்' அடிப்படையில் பிரிவு'சி' யில் இடம் பெற வேண்டிய 10 மதிப்பெண் கேள்விகள், பிரிவு 'டி'யில் இடம் பெற்றுள்ளன. குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், பதில் அளிக்க முடியாதவாறு உள்ளன. தேவை மற்றும் அளிப்பு பாட வினாக்கள் பிரிவு' சி' யில் இடம் பெற வேண்டும். பிரிவு'டி'யில் இடம்பெற்றன. 20 மதிப்பெண் வினாவாக இடம்பெற வேண்டிய 2 வினாக்களை 10 மதிப்பெண் வினாவாக கேட்டுள்ளனர். இதற்கு பதில் எழுத மாணவர்கள் ஒரு மணிநேரம் செலவிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளிக்க வேண்டும். பொருளாதார விடைத்தாளை மதிப்பீடு செய்ய தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் பெஞ்ச் விசாரித்தது. மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார். அரசு வழக்கறிஞர் சண்முகநாதன், 'பிரிவு ஏ'யில் (தமிழ் வழி) வினாக்கள் 18 மற்றும் 20 தமிழாக்கம் தவறாக இடம் பெற்றுள்ளன. இவ்வினாக்களுக்கு விடையளித்த மாணவர்களுக்கு 2 மதிப்பெண் வழங்கப்படும்,” என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள் பைசல் செய்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement