Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 தேர்வு: 394 பேருக்கு 3 ஆண்டு தேர்வெழுத தடை?

பிளஸ் 2 தேர்வில், 394 பேர் முறைகேட்டில் சிக்கி, மூன்றாண்டுகள் வரை, தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட உள்ளது. கணிதத் தேர்வில் அதிகபட்சம், 52 பேர் சிக்கி, தேர்வெழுதும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மொத்தம், 394 பேர் முறைகேடு புகாரில் சிக்கி, பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோருக்கும், மூன்றாண்டுகள் வரை தேர்வெழுதத் தடை விதிக்கப்படும். பிடிபட்டவர்களில், 265 பேர் மாணவர்கள்; 129 பேர் தனித் தேர்வர்கள். அதிகபட்சமாக கணிதத் தேர்வில், 51 பேர் சிக்கி உள்ளனர். தனித் தேர்வர்களில், ஆங்கிலம் முதல் தாளில் அதிக பட்சமாக, 24 பேர் சிக்கினர். இவர்களுக்கு முறையான விசாரணை நடத்தி, தேர்வறைக் கண்காணிப்பாளர், அவர்களை பிடித்த பறக்கும் படை அல்லது கண்காணிப்பு ஆசிரியர், தேர்வு மையத் தலைமை கண்காணிப்பாளர் மற்றும் பிடிபட்டவரின் அறிக்கை அடிப்படையில், தேர்வெழுதத் தடை செய்யும் தண்டனையை, தேர்வுத்துறை உறுதி செய்யும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement