Ad Code

Responsive Advertisement

பல வினாக்கள்; ஒரே பதில்: மாணவர்களுக்கு வசதி

பிளஸ் 2 வரலாறு தேர்வில் அடுத்தடுத்து இடம் பெற்ற சில வினாக்களுக்கு ஒரே மாதிரி பதில் அளிக்கும் வகையில் இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இத்தேர்வின் ஒரு மதிப்பெண் பகுதியில் 2வது வினா 'காரன்வாலிஸ் பிரபு அறிமுகப்படுத்தியது' என்றும் அதற்கான நான்கு பதில்களும் கொடுக்கப்பட்டன. இதற்கு சரியான விடை 'நிலையான வரித் திட்டம்' ஆகும். ஆனால், அதே பகுதியில் 5வது வினாவாக நிலையான வரித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்? என கேட்கப்பட்டது. இது 2ம் கேள்வியின் பதிலாக அமைந்தது. இதேபோல் 10 மதிப்பெண் பகுதியில், '80பி'யில் நீதி கட்சியின் சாதனைகளை ஆய்வு செய்க என கேட்கப்பட்டது. ஆனால், '81பி'யிலும் 'நீதி கட்சியின் சாதனைகளின் ஆய்வு மற்றும் நீதி கட்சி முடிவு குறித்து எழுதுக' என கேட்கப்பட்டது. இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே விடையை தான் மாணவர்கள் எழுத வேண்டியதாக இருந்தது. இதுகுறித்து மதுரை ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி வரலாற்று பாட ஆசிரியை சந்திரகலா கூறுகையில் "இத்தேர்வில் வினாக்கள் மிக எளிதாக கேட்கப்பட்டன. ஒருசில வினாக்கள் ஒரே மாதிரி விடையளிக்கும் வகையில் கேட்கப்பட்டன. இதை மாணவர்கள் புரிந்துகொண்டு எழுதியதால் அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது" என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement