'காணாமல் போனவர்கள், அடையாளம் தெரியாமல் இறந்தவர்களின் விவரங்களை, போலீஸ் துறை இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதை மக்களும் தெரிந்து கொள்ளலாம்' என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவரின் போட்டோ, அங்க அடையாளம், உடைகளின் தன்மை, முழு முகவரிகளையும், போலீசார் இணையதளத்தில் பதிவு செய்து விடுவர். அவற்றை தமிழக காவல் துறையின் www.tn police.org, www.tn police.gov.in, மத்திய அரசின் www.ncrb.gov.in, www.trackthemissingchild.gov.in இணைய தளங்களில் பதிவு செய்கின்றனர். இதன் மூலம் தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியும். இந்த இணையதளங்களை பெரும்பாலும் போலீஸ் துறையினர் தான் பயன்படுத்துகின்றனர். தற்போது பொதுமக்களும் இந்த இணைய தளங்களுக்கு சென்று காணாமல் போனவரின் பெயர், வயது, முகவரி, அடையாளங்களை தெரிவித்தால், அவர்களை பற்றி தகவல்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம் என, போலீசார், பாதிக்கப்பட்டவர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை