Ad Code

Responsive Advertisement

விருதுநகரில் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை -இன் மாநில சிறப்பு செயற்குழு நடைபெற்றது

 அனைத்திந்திய ஆசிரியர் பேரவை -இன் மாநில சிறப்ப செயற்குழு இன்று 07/03/2015 விருதுநகரில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் திரு.பாலமுருக பாண்டியன் அவர்கள் தலைமையில் தாங்கினார். மாநில பொதுச்செயலாளர்  திரு.செ.ஜார்ஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்திற்கு விருதுநகர், தூத்துக்குடி  மாவட்டங்களில் புதியதாக பேரவையில் இணைந்த உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு மாநில நிர்வாகிகளிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவர்களை பொதுச் செயலாளர்   திரு.செ.ஜார்ஜ் அவர்கள் சால்வை அணிவித்து  வரவேற்றார்   விருதுநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் பொறுபேற்றுக்கொண்டனர்.

அச்சமயம்  அனைத்திந்திய ஆசிரியர் பேரவை -இன்  கொடியினை  மாநிலத் தலைவர் திரு.பாலமுருக பாண்டியன் அவர்கள், மாநில பொதுச் செயலாளர்   திரு.செ.ஜார்ஜ் அவர்கள், மாநிலத் துணைத்தலைவர்   திரு.லக்ஷ்மணன் ஆகியோர் பேரவையின்  புதிய கொடியினை உறுப்பினர்களுக்கு  அறிமுகப்படுத்தினர். 


கூட்டத்திற்கு  திரு. கிருஷ்ணமூர்த்தி,  திரு.சிவாஜி,  திரு.குமார் ஈ.வே.ரா. உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநிலத் துணைத்தலைவர் திரு.லக்ஷ்மணன் , விருதுநகர் மாவட்ட செயலாளர்  திரு.கனகராஜ் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.           

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement