''மலேசியாவில் கல்வி பயிலும் இந்தியர்கள், முழு சுதந்திரத்துடனும், பாதுகாப்புடனும் உள்ளனர்,'' என, மலேசிய நாட்டின் கல்வித்துறை இணை அமைச்சர் கமலநாதன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் இருந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு, சென்னை வந்த கமலநாதன், விமான நிலையத்தில் அளித்த பேட்டி: தமிழ் தொன்மையான மொழி; அந்த மொழிக்கு மலேசிய அரசு உரிய மரியாதை வழங்கி வருகிறது. வரும் கல்வியாண்டு முதல், 254 அரசு பள்ளிகளில் திருக்குறளை பாடத்திட்டமாக அமைக்க உள்ளோம். ஆரம்பப் பள்ளிகள் மட்டுமின்றி உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் இரண்டு பல்கலைக்கழகங்களில் திருக்குறளை பாடத்திட்டமாகச் சேர்க்க உள்ளோம். இந்தியா - மலேசியா நாடுகள் கலாசார அடிப்படையில் ஒன்றிணைந்து உள்ளன. அங்கு இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகம் பேர் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் படித்து வருகின்றனர். உதவித்தொகை பெற்று மலேசியாவில் கல்வி கற்க வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, வரும் கல்வியாண்டு முதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மலேசியாவில் கல்வி பயிலும் இந்தியர்கள், முழு சுதந்திரத்துடனும், பாதுகாப்புடனும் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை