Ad Code

Responsive Advertisement

கணிதத் தேர்வுக்குப் பயந்து பிளஸ் 2 மாணவி தற்கொலை

சென்னை அருகே திரிசூலத்தில் கணிதத் தேர்வுக்குப் பயந்து பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திரிசூலம் ராணி அண்ணாநகரைச் சேர்ந்தவர் சங்கர். இவர் கல்லுடைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகள் இன்பராணி (17), புழுதிவாக்கத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இன்பராணி இப்போது நடைபெற்று வரும் பிளஸ் 2- தேர்வை எழுதி வந்தார்.

புதன்கிழமை நடைபெற்ற கணக்குத் தேர்வுக்காக இன்பராணி படித்து வந்தார். இந்நிலையில் புதன்கிழமை காலை வெகுநேரமாக இன்பராணி அறை பூட்டியே இருந்தது.

இதையடுத்து, பெற்றோர் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கிட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பல்லாவரம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இன்பராணி கணிதப் பாடத்தில் பின்தங்கியிருந்தார். இதனால் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் இன்பராணி தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement