Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2வுக்கு 32, 10ம் வகுப்புக்கு 24 பக்கம் பொது தேர்வு விடைத்தாள் பயன்பாட்டில் சிக்கன நடவடிக்கை

பிளஸ்2 மற்றும் எஸ்எஸ்எல்சி பொது தேர்வுகளில் விடைத்தாள் பயன்படுத்துவதில் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இனி பிளஸ் 2வுக்கு 32, 10ம் வகுப்புக்கு 24 பக்கம் கொண்ட விடைத்தாள் மட்டுமே வழங்கப்படும். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்குகிறது.  
இந்தாண்டு முதல் முறையாக மொழிப்பாடங்களுக்கு கோடிட்ட தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட பக்கங்களும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டில் புதிய நடைமுறையாக 40 பக்கம் கொண்டதாக விடைத்தாள்  வழங்கப்பட்டது. அதற்கு முன்பு வரை 16 பக்கங்கள் கொண்ட பிரதான விடைத்தாள் மற்றும் 4 பக்கங்களுடன் கூடிய கூடுதல் தாள் வழங்கும் நடைமுறை இருந்தது. நடப்பு ஆண்டில் விடைத்தாள் வீணாவதைத் தடுக்க இந்தாண்டு பக்கங்களை குறைத்திருப்பதுடன் மொழிப்பாடங்களுக்கு கோடிட்ட தாள்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்தாண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு  32 பக்கங்களாகவும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு  24 பக்கங்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ் முதல் தாள், 2ம் தாள் மற்றும் ஆங்கிலம் முதல் தாள், 2ம் தாள் ஆகிய நான்கு தேர்வுகளுக்கும் கோடிட்ட தாள்கள்  வழங்கப்பட உள்ளது.  கணக்குப் பதிவியல் பாடத்துக்கு முதல் 16 பக்கங்களுக்கு வெள்ளைத் தாளும், மீதம் உள்ள 16 பக்கங்களுக்கு கணக்குப்பதிவியல் தாளும் வழங்கப்பட்டுள்ளது. வரலாறு பாடத்துக்கு இந்திய வரைபடம் மற்றும் உலக வரைபடம் ஆகியன விடைத்தாளிலேயே இணைக்கப்பட்டி ருக்கும். கடந்தாண்டு வரை தட்டச்சு பாடப்பிரிவு படித்த மாணவர்களுக்கு எழுத்து தேர்வு இருந்தது. இந்தாண்டு செய்முறைத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஒரு தரப்பினரிடம் அதிக பக்கங்களில் தேர்வு எழுதினால் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இனிமேல் அது போன்ற நடவடிக்கை பலன் தராது. மேலும் விடைத்தாள் முறைகேட்டையும் தடுக்க முடியும் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். புதிய விடைத்தாள் முறை குறித்து மாணவர்களுக்கு விளக்கும் வகையில் வகுப்பறைகளில் அறிவுரை வழங்கவேண்டும். அதேபோல் அறிவிப்பு பலகைகளிலும் புதிய நடைமுறை குறித்த விளக்கங்களை எழுதி வைக்க பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement