திருப்பூர் மாவட்ட அளவில், உடுமலை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஏழு ஆசிரியர்களுக்கு கல்வித்துறையின் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
உடுமலை, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உதவித்தலைமையாசிரியர் சிவக்குமார், ஆங்கிலாசிரியர் பழனிச்சாமி, பொருளியல் ஆசிரியர் மாரியப்பன், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழாசிரியர் வசந்தராஜன், விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வணிகவியல் ஆசிரியர் சுகந்தி, ஆங்கிலாசிரியர் சுகந்திலதா மற்றும் நுாறு சதவீத தேர்ச்சி மற்றும் உயர்மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் பட்டியலில், பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 19, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15, விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 35 ஆசிரியர்களுக்கும், விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர்கள், முத்துலட்சுமி, துரைசாமி, விஜயலட்சுமி பாராட்டு தெரிவித்தனர். விழாவில், மாவட்டக்கல்வி அலுவலர் கரோலின், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நுார்மாலிக் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே கணியூர் வெங்கிடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஓவிய ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு, திருப்பூர் மாவட்ட அளவிலான நல்லாசிரியர் விருதும், இந்தப்பள்ளியில் பல்வேறு பாடங்களில் மாணவர்களை 100 மதிப்பெண்கள் பெற வைத்த ஆசிரியர்கள் அன்பழகன், சசிகலா, இசைவாணி, ஜெயசங்கர், தமிழ்செல்வி, அமுதா ஆகியோருக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி கணியூர் பள்ளியில் நடந்தது. பள்ளித்தாளாளர் பாபு, பள்ளி செயலர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை ஆசிரியர் குணசேகரன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை