Ad Code

Responsive Advertisement

அரசு செவிலியர் பயிற்சி: ஆசிரியர் சங்கத்துக்கு தனி இணையதளம்

அரசு செவிலியர் பயிற்சி ஆசிரியர் சங்கத்துக்கான தனி இணையதளம் மதுரையில் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இணையதளத்தை சென்னை ஸ்டான்லி செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் பானுமதி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் கோமலி, மகப்பேறு மருத்துவமனை செவிலிய பயிற்சிப் பள்ளி முதல்வர் நானாவதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி ஆசிரியர் சங்கச் செயலர் என்.பாலசுப்பிரமணியன் ஆண்டறிக்கை வாசித்தார். அப்போது அவர் கூறுகையில், செவிலியர் பிரிவுக்காக அரசு கூடுதல் மருத்துவக் கல்வி இயக்குநர் (செவிலியர்) நியமிக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த இணையதள செயல்பாடு இருக்கும் என்றார்.

மதுரை மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் மகேஸ்வரி வரவேற்றார். தமிழ்நாடு அரசு செவிலியர் பயற்சிப் பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவர் என்.தங்கதுரை தலைமை வகித்தார். துணைச் செயலர் ஜி.கற்பகம் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement