Ad Code

Responsive Advertisement

மாற்றுத்திறனாளிகள் தினம்: ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசின் திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள் முதல்–அமைச்சர் வாழ்த்து

ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் அரசின் திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று இன்று (புதன்கிழமை) மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

மாற்றுத்திறனாளிகள் தினம்
உலகம் முழுவதும் டிசம்பர் மாதம் 3–ந் தேதி மாற்றுத்திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் சமவாய்ப்புகள் பெற்று வாழ்வில் ஏற்றம் பெற்றிட, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை 1,000 ரூபாயாக உயர்த்தியது; ஆரம்ப நிலை பயிற்சி மையத்திற்கு வரும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சத்துணவு; சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, வாசிப்பாளர் உதவித்தொகை ஆகியவை இரு மடங்காக உயர்வு;

அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை; மாற்றுத்திறனாளிகளின் சுயவேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தேசிய திரைப்படக் கழகத்தின் மூலம் பல்லூடக பயிற்சி மற்றும் இலக்கமுறை புகைப்படப் பயிற்சி என பல்வேறு நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசின் திட்டங்கள்
மேலும், இந்தியாவிலேயே முதன் முறையாக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் வழங்கப்படுவது; சென்னையில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் குறைபாட்டினை கண்டறிந்து தேவையான உபகரணங்கள், சான்றிதழ்கள், உதவித்தொகை, சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்குதல்; பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத வீடுகள் ஒதுக்கீடு; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தேர்வு; ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு; ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச வயது வரம்பு 45–லிருந்து 18 ஆக குறைப்பு;

இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள்; செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கு நவீன காதொலிக் கருவிகள்; பார்வைத்திறன் குறையுடைய மாணவ, மாணவிகளுக்கு எழுத்துகளைப் பெரிதாக்கி படிப்பதற்கான ‘மேக்னிபயர்’ கருவிகள்; பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்குச் குச்சிகள்; மாற்றுத் திறனாளிகளுக்கு பேருந்துப் பயணச் சலுகை; குடும்பத்தில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அக்குடும்பத்திலுள்ள அனைவருக்கும் வருமான உச்சவரம்பின்றி முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் பயன் போன்ற எண்ணற்ற சீர்மிகு திட்டங்களை ஜெயலலிதா தொடங்கினார். ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு அவற்றை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

வாழ்த்து
மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடவும், அவர்கள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக வாழ்ந்திடவும், ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துகளை மீண்டும் அனைவருக்கும் 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement