Ad Code

Responsive Advertisement

டிச. 5-இல் ஆசிரியர் பல்கலை. பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் 5-ஆவது பட்டமளிப்பு விழா வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் டிசம்பர் 5-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் 80 மாணவர்கள் நேரடியாகவும், 69,393 பேர் விழாவில் பங்கேற்காமலும் பட்டச் சான்றிதழ்களைப் பெற உள்ளனர்.

தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான கே. ரோசய்யா தலைமையில் நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன், புது தில்லி தேசிய கல்வித் திட்ட, நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். கோவிந்தா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

தேர்வு மதிப்பெண் முறையில் மாற்றம்: மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் தேர்வு மதிப்பெண் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதாவது, முன்னர் எழுத்துத் தேர்வு (தியரி) 800 மதிப்பெண், செய்முறைத் தேர்வு 400 மதிப்பெண் என மொத்தம் 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.

இப்போது எழுத்துத் தேர்வு 600 மதிப்பெண், செய்முறைத் தேர்வு 600 மதிப்பெண் என சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு தேர்வுகளிலும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண் பெறுபவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். இதன் மூலம் மாணவர்களின் செய்முறைத் திறன் மேம்படும்.

2014-15-ஆம் கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றார் அவர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement