Ad Code

Responsive Advertisement

TNPSC : GROUP - II EXAMINATION HALL- TICKET PUBLISHED

வரும், 8ம் தேதி நடக்க உள்ள குரூப் - 2 தேர்வுக்கு, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. வணிக வரித்துறை உதவி அலுவலர், சார் பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட, பல பதவிகளில், 1,064 பணியிடங்களை (குரூப் - 2) நிரப்ப, கடந்த ஆண்டு, டிசம்பர், 1ம் தேதி, முதல்நிலை தேர்வு நடந்தது.
இதில், தகுதி பெற்றவர்கள், வரும், 8ம் தேதி நடக்கும் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்று காலை, கம்ப்யூட்டர் வழியில், பொது அறிவு தாள் தேர்வும், பிற்பகலில், விரிவாக விடை அளிக்கும் வகையிலான தேர்வும் நடக்கிறது.
இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான, 'ஹால் டிக்கெட்', www.tnpscexams.net, www.tnpsc.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. முதன்மை தேர்வுக்கான 100 ரூபாய் கட்டணத்தை, இதுவரை செலுத்தாத தேர்வர்கள், 'செயலர், டி.என்.பி.எஸ்.சி., சென்னை - 3' என்ற முகவரிக்கு, டி.டி., எடுத்து, நேரடியாக, தேர்வு அறையில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா கேட்டுக் கொண்டு உள்ளார்.

ENTER YOUR ROLL NUMBER HERE TO DOWNLOAD GROUP - II HALL-TICKET

Login
Application No
(OR)
Registration No*
Steps to enable JavaScript in Internet Explorer versions (7.0,8.0),Mozilla Firefox3.0, Google Chrome2.0 and Safari4.0
Copyright ©2014. Tamil Nadu Public Service Commission. All rights reserved.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement