Ad Code

Responsive Advertisement

'பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவ, மாணவியர் இன்றும், நாளையும் இணைய தளத்தில் இருந்து விடைத்தாள்களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

சமீபத்தில், பிளஸ் 2 உடனடித் தேர்வு நடந்தது. தேர்வு முடிவிற்குப் பின், விடைத்தாள் நகல் கேட்டு, விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு, அவர்களின் விடைத்தாள் நகல், http://tndge.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர்கள், 5ம் தேதியும் (இன்று), 6ம் தேதியும், மேற்கண்ட இணையதளத்தில், பதிவு எண் மற்றும் விண்ணப்ப எண்ணை பதிவு செய்து, விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.
மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள், இதே இணையதளத்தில் இருந்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, 7ம் தேதி காலை முதல், 8ம் தேதி பகல் 1:00 மணிக்குள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். உரிய கட்டணங்களையும், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement