Ad Code

Responsive Advertisement

அனைத்து காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் !!!

மத்திய, மாநில, தனியார் பல்கலைக்கழகங்களும் அதன்கீழ் செயல்படும் கல்லூரிகளும், வரும் கல்வியாண்டிற்குள் அனைத்து ஆசிரியர் காலியிடங்களையும் நிரப்பியிருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

அதிக அளவில் காலியிடங்கள் இருக்கும் காரணத்தால் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டே அந்த இடங்கள் ஈடு செய்யப்பட்டு வருகிறது என்றும் இதனால் முழுமையான கற்பித்தல் முறை பாதிக்கப்படுவதாகவும் யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.

எனவே, அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரந்தரப் பணியாளர்கள் கொண்டு வரும் கல்வியாண்டிற்குள் நிரப்பப்பட வேண்டும் எனவும் யு.ஜி.சி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், நிரப்பப்படும் பணியிடங்கள் இடஒதுக்கீட்டின் அடிப்படையிலும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறும் பல்கலைக்கழகத்திற்கு பொது மேம்பாட்டு நிதி நிறுத்தி வைக்கப்படும் எனவும் அண்மையில் யு.ஜி.சி., அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் எச்சரித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement