Ad Code

Responsive Advertisement

இரண்டாம் இடைப்பருவ தேர்வு அட்டவணை திடீரென மாற்றம்

இரண்டாம் இடைப்பருவ தேர்வு அட்டவணை திடீரென மாற்றப்பட்ட தகவல், மாணவர்களுக்கு தெரிவிக்கப்படாததால், நேற்று தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இரண்டாம் இடைப்பருவ தேர்வு நேற்று துவங்கியது. இதற்கான அட்டவணை, சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டது.
இதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று காலை, தமிழ்; மதியம், ஆங்கிலம் தேர்வு நடப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை மாலை, பள்ளிகளுக்கு இ-மெயில் மூலமாக, புதிய தேர்வு அட்டவணை, கல்வி துறையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புதிய அட்டவணையில், நேற்று காலை, இயற்பியல்; மதியம், தமிழ் தேர்வு நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை செயல்பட்ட பள்ளிகளில் மட்டும், புதிய அட்டவணை மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. சனிக்கிழமை செயல்படாத பள்ளிகளில், புதிய அட்டவணை குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்க இயலவில்லை. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின், நேற்று காலை, தேர்வு எழுத வந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு, தமிழ் தேர்வுக்கு பதிலாக இயற்பியல் தேர்வு நடத்தப்பட்டதால், அதிர்ச்சி அடைந்தனர்; தேர்வு எழுதவும் திணறினர். புதிய அட்டவணைபடி, இன்று காலை, ஆங்கிலமும், மாலை, வேதியியல் தேர்வும் நடைபெற உள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement