Ad Code

Responsive Advertisement

ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் தாமதம் கருவூல அதிகாரிகளை கண்டித்து போராட முடிவு.

 திட்டக்குடி தாலுகாவில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நேற்று முன்தினம் மாத சம்பளம் கிடைக்காததால் கடும் அதிருப்தியடைந்தனர். திட்டக்குடி தாலுகாவில் ஆசிரியர்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.  இவர்களுக்கு மாதத்தின் கடைசி நாளன்று சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். இதற்காக சம்பள பட்டியல் தயாரிக்கப்பட்டு திட்டக்குடி கிளை கருவூலத்தில் சமர்ப்பிக்கப்படும்.
அதன் பின் கருவூலத்திலிருந்து திட்டக்குடி இந்தியன் வங்கிக்கு அனுப்பப்பட்டு ஆசிரியர்களின் வங்கி கணக்கிற்கு சம்பளம் ஈ.சி.எஸ்., செய்யப்படும்.அக்டோபர் மாதத்திற்கான சம்பளம் நேற்று மாலை வரை கிடைக்காததால் ஆசிரியர்கள் கடும்அதிருப்தியடைந்தனர். இதையடுத்து ஆசிரியர்கள் கருவூலம் மற்றும் வங்கி அதிகாரிகளை விசாரித்த போது ஒருவரை மற்றொருவர் காரணம் கூறியதால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "கருவூலத்திலிருந்து வெற்று சி.டி., அனுப்பியதால், அதை மீண்டும் திருத்தித் தர கருவூலத்திற்கு அனுப்பி பெற்றதால் தாமதமானதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அலட்சியமாக செயல்பட்ட கருவூல அதிகாரிகளை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம்' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement