Ad Code

Responsive Advertisement

ஆசிரியர்களுக்கு பயிற்சி இல்லை; வீணாகும் 'லேப்டாப்'; மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு கேள்விக்குறி

தொடக்க கல்வித்துறையின்கீழ், மாநிலம் முழுவதும் கற்பித்தல் பணிக்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப், கம்ப்யூட்டர் சார்ந்த நவீன பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு இல்லாத காரணத்தால், பயனற்று பள்ளிகளில் வீணாகி வருகிறது.

தொடக்கல்வித்துறைக்கு உட்பட்ட, 8026 நடுநிலைப்பள்ளிகளுக்கு நான்கு கட்டங்களாக, லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன. 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பிலும், பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன.இன்றைய உலகில் அனைத்து செயல்பாடுகளும் தொழில்நுட்பத்தை சார்ந்தே உள்ளது என்பதை உணர்ந்த பள்ளிக்கல்வித்துறை, 'கனெக்டிவ் கிளாஸ் ரூம்', மாணவர்களுக்கு இலவச லேப்டாப் உட்பட பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. இதன் படி, ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தபட்சம் வாரத்தில் ஐந்து பாடவேளைகள் கற்பித்தலுக்கு லேப்டாப் பயன்படுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும், ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை மேற்கொள்வதை முறையாக, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேற்பார்வையில், கண்காணிக்கவும், உணவு இடைவேளைக்கு முன்பு அல்லது பின்பு வகுப்புகளை கம்ப்யூட்டர் வழி கற்பித்தல் முறைக்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு, அதற்கான தொகுப்புகளும் வழங்கப்பட்டன.

லேப்டாப் சார்ந்த அடிப்படை பயிற்சிகள் இல்லாத பெரும்பாலான ஆசிரியர்கள், கற்பித்தல் பணிக்கு லேப்டாப் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களும் தொழில்நுட்பம் சார்நத அறிவை தொடக்க நிலைகளில் பெற இயலாமல், உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சமயங்களில் சிரமப்படும் சூழல்கள் உருவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில், 244 அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சில பள்ளிகளை தவிர பெரும்பாலான பள்ளிகளில் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் வெறும் அலங்கார பொருட்களாகவே வைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி கூறுகையில், ''கற்பித்தல் பணிக்கு, லேப்டாப் பயன்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படும். பள்ளி தலைமையாசிரியர்களிடம் தொடர்ந்து இதுகுறித்து அறிவுறுத்தப்படுவதுடன், நடுநிலைப்பள்ளிகளில் மூன்று அல்லது நான்கு லேப்டாப் இருக்கும் பட்சத்தில், தொடக்கப்பள்ளிகளுக்கு ஒன்று வழங்குமாறும் தெரிவித்துள்ளோம். உதவி தொடக்க கல்வி அலுவலர் மூலம், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement