அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர்(லேப் அசிஸ்டெண்ட்) பணியிடங்களின் பட்டியல் திருவண்ணாமலை மற்றும் செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதையொட்டி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
எஸ்.சி மற்றும் எஸ்.டி வகுப்பினர் 35 வயதுக்குள்ளும், எம்பிசி, பிசி மற்றும் பிசி(முஸ்லிம்) வகுப்பினர் 32 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். கல்வித்தகுதி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
இப்பணியிடங்களுக்கு உத்தேச பதிவு மூப்பு முன்னுரிமை பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பெற்றுள்ளனர்.மேலும், எஸ்.சி(ஏ) பிரிவு பெண்களில் 8.7.1991 வரையிலும், எஸ்சி(பெண்கள்) 2.6.1989 வரையிலும், எம்.பிசி (பெண்கள்) 29.12.1987 வரையிலும் பிசி, எம்பிசி ம்றறும் இதர வகுப்பினர் 4.8.1987 வரையிலும் பதிவு செய்தவர்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.அதேபோல், முன்னுரிமையற்ற பொது பிரிவில் எஸ்சிஏ பிரவில் 3.7.1990 வரையிலும், பிசிஎம் பிரிவில் 28.8.1985 வரையிலும், எஸ்சி, எம்பிசி, பிசி மற்றும் இதர பிரிவில் 30.11.1884 வரையிலும் மாற்றுத்திறனாளர்கள் 2.3.1987 வரையிலும் பதிவு செய்துள்ளவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.எனவே, உரிய பதிவு தேதிக்குள் இடம்பெற்றுள்ள நபர்கள், தங்களுடைய பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என வரும் 10ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உறுதிபடுத்திக் கொள்ளலாம் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை