Ad Code

Responsive Advertisement

காலாண்டு விடுமுறைக்கு பின்னும் நிதிஉதவி பள்ளி திறக்கப்படவில்லை - பள்ளிக்கூட பூட்டினை உடைத்து தொடக்கல்வி அலுவலர் பாடங்களை நடத்தினார்.

வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியில் இயங்கிவரும் திருவிக நிதிஉதவி நடுநிலைப்பள்ளி உள்ளது. இது மிகவும் பழைமை வாய்ந்த பள்ளியாகும். இந்த பள்ளியில் தற்போது 8 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். கடந்த மாதம் 27ம் தேதி முதல் பள்ளிக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டது. நேற்று விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நேரம் கடந்த பின்னரும் பள்ளி திறக்கப்படவில்லை.

இதனால் மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள் நாட்றம்பள்ளியில் உள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து உதவிதொடக்கக்கல்வி அலுவலர் சித்ரா, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்தார். அப்போது, பள்ளிக்கூடம் பூட்டுபோடப்பட்டிருந்தது.
பின்னர் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பி.எஸ்.சரவணன் என்பவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து போலீசார் உதவியுடன் பள்ளிக்கூட பூட்டினை உடைத்து அவர் உள்ளே சென்றார். பின்னர் மாணவர்கள் வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பாடபுத்தகங்களை விநியோகம் செய்த உதவி தொடக்க கல்வி அலுவலரே பாடங்களை நடத்தினார்.
நாளை(இன்று) முதல் வேறு பள்ளிக்கூட ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்த நடவடிக்கை எடுப்பதாக பெற்றோரிடம் அவர் உறுதி அளித்தார்.
முன்னதாக இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் உதவி தொடக்கல்வி அலுவலர் சித்ரா புகார் மனுவும் அளித்தார். இப்புகார் மனுவில், பள்ளியின் நிலை குறித்து வேலு�ர் மாவட்ட தொடக்கல்வி அலுவலருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளியை திறந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.
மேலும், ஊர் பொதுமக்கள் தரப்பில், உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடம், பள்ளியை தொடர்ந்து நடத்தவேண்டும் என்றும், தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியின் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் புகார் கடிதம் கொடுக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி இதேபகுதியைச்சேர்ந்த கே.சரிதா என்பவர், நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில், தனது மகன்களான அரசு, இனியா, பிருத்திவிராஜ், அஜய்பிரசாந்த், தினேஷ் ஆகியோர் நிதியுதவி பள்ளியில் படித்து வருகிறார்கள், பள்ளியின் தாளாளர் மகேந்திரன் எனது மகன்களை வேறு பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்படி மிரட்டினார். ஆனால், நான் அதனையும் மீறி, இதே பள்ளியில் படிக்க வைத்து வருகிறேன். எனவே என் பிள்ளைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, இதே பள்ளியில், கல்வி பயில உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், தன்னை மிரட்டிய பள்ளியின் தாளாளர் மகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement