அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, கடந்த ஜூலை, 1ம் தேதி முதல், அகவிலைப்படியை, 7 சதவீதம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:மக்கள் பணியாற்றும் அரசு ஊழியர்களையும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களையும், ஊக்கப்படுத்தும் வகையில், மத்திய அரசுக்கு இணையாக, அகவிலைப்படியை மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தவர் ஜெயலலிதா.அவரது வழியில், தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படி, கடந்த ஜூலை, 1ம் தேதி முதல், அவர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில், 7 சதவீதம், அதாவது 100 சதவீதத்தில் இருந்து, 107 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியையும், அவர்களுடைய அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில், 7 சதவீதம் உயர்த்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும், கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர், எழுத்தர், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி வழங்கப்படும், அனைவருக்கும் பொருந்தும்.இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என, 18 லட்சம் பேர் பயன் பெறுவர்.இந்த அகவிலைப்படி உயர்வு, ஜூலை, 1ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு, ரொக்கமாக வழங்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு, 1,558.97 கோடி ரூபாய், செலவு ஏற்படும்.இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை