Ad Code

Responsive Advertisement

மதுரை மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆய்வக உதவியாளர் பணி காலியிடங்களுக்கு பதிவுமூப்பு பட்டியலை தகுதியுடையவர்கள் அக்டோபர் 20-ஆம் தேதி சரிபார்த்துக் கொள்ளலாம்-மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர்.

மதுரை கல்வி மாவட்டத்தில் 13 இடங்களும், மேலூர் கல்வி மாவட்டத்தில் 31 காலி பணியிடங்களும், உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 23 காலி பணியிடங்களும் உள்ளன. இந்த காலிப் பணியிடங்களுக்கு தகுதியான கல்வித்தகுதி மற்றும் பதிவுமூப்பு அடிப்படையிலான பட்டியல் கல்வி அலுவலரால் கோரப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி மற்றும் உத்தேச பதிவுமூப்புக்கு உள்பட்ட மதுரை மாவட்ட பதிவுதாரர்கள் மட்டும், தங்களது பதிவு விவரத்தை அக்டோபர் 20-ம் தேதி காலை 11 மணிக்கு தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை அசல், அனைத்து கல்வி சான்றுகள் மற்றும் குடும்ப அட்டையுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement