Ad Code

Responsive Advertisement

உதவிப் பேராசிரியர் தகுதித்தேர்வு டிசம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் உதவிப் பேராசிரியர் தகுதித்தேர்வு அல்லது இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதித்தேர்வு டிசம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வை தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 79 பாடங்களில் முதுநிலைப் பட்டப்படிப்பு பயின்ற, இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வை எழுத விரும்புவோர் www.cbsenet.nic.in இணையதளத்தில் பதிவு செய்து, பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, வருகைச்சீட்டு, வங்கிச் செலுத்துச்சீட்டு, ஜாதிச் சான்றிதழ், மாற்றுத் திறனாளிச் சான்றித் மற்றும் முதுநிலைப் படிப்புக்கான உரிய சான்றிதழ்களுடன் ஒருங்கிணைப்பாளர், விரிவுரையாளர்களுக்கான தகுதித்தேர்வு, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி -24 என்ற முகவரிக்கு நவம்பர் 25-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
சிபிஎஸ்இ இணையத் தளத்தில் பதிவு செய்யப்படாத மற்றும் முழுமையற்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அனுமதிச் சீட்டு, வங்கிச் செலுத்துச் சீட்டின் நகலை தேர்வ நாளன்று கொண்டு வர வேண்டும். தேர்வை எழுத விரும்புவர்கள் இம்மாதம் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement