Ad Code

Responsive Advertisement

எம்.பி.பி.எஸ்., வகுப்பு இன்று துவக்கம்ஜீன்ஸ் அணிய தடை; ராகிங் செய்தால் நீக்கம்

அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று துவங்குகின்றன. எதிர்கால கனவுகளோடு, மாணவர்கள் கல்லுாரிகளில் அடியெடுத்து வைக்கின்றனர்.தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லுாரியும் உள்ளன.
கலந்தாய்வு:இதில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 100 பி.டி.எஸ்., (பல் மருத்துவம்) இடங்களும் உள்ளன. இந்த ஆண்டுக்கான, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, இரண்டு கட்ட கலந்தாய்வுகளில் முடிந்தன. அனைத்து இடங்களும் நிரம்பின.

இட ஒதுக்கீடு பெற்ற மாணவ, மாணவியர் கல்லுாரிகளில் மருத்துவக் கல்வி இயக்கக வழிகாட்டுதல் படி சேர்ந்தாலும், அரசு அறிவிப்பின்படி, முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., வகுப்புகள், முறைப்படி இன்று துவங்குகின்றன.கட் - ஆப் மதிப்பெண் அடிப்படையில், இட ஒதுக்கீடு பெற்ற மாணவ, மாணவியர், சிறந்த டாக்டர்களாகும் எதிர்கால கனவுகளோடு, இன்று கல்லுாரி வகுப்புகளில் அடி எடுத்து வைக்கின்றனர். அவர்களை, மூத்த மாணவர்களும் வரவேற்று, உற்சாகப்படுத்த தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம், சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

l மாணவ, மாணவியர், ஜீன்ஸ் பேன்ட், டி - சர்ட் போன்ற உடைகளை அணியக் கூடாது. மாணவியர் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற உடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். தலைமுடியை விரித்து விட்டபடி வராமல், இறுக்கமாக கட்டிக்கொண்டு வகுப்புக்கு வரவேண்டும். l மாணவர்கள் பேன்ட், முழுக்கை சட்டை அணிந்து, இன் செய்து கொண்டும், ஷூ அணிந்தும் வர வேண்டும். ஜீன்ஸ், டி - சர்ட் அணிந்து வருவோருக்கு வகுப்புகளில் அனுமதி இல்லை. டாக்டருக்கு படிக்க வருவோர், கண்ணியமான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதால், இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவக் கல்வி இயக்குனரகம்
அறிவித்துள்ளது.

எச்சரிக்கை:இதுதவிர, ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. ராகிங் புகாரில் சிக்கினால், கல்லுாரியை விட்டு நீக்கப்படுவர் எனவும், எச்சரிக்கப்பட்டு உள்ளது.அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை சிக்கலின்றி முடிந்தது. சுயநிதி கல்லுாரிகளில், ஐந்து கல்லுாரிகளில், இந்த ஆண்டு, மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்ததால், 700 எம்.பி.பி.எஸ்., இடங்கள் வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement