Ad Code

Responsive Advertisement

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்

உடல் உறுப்பு தானம் செய்வதில், ஐந்து ஆண்டுகளாக, தேசிய அளவில். தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில், 2008ல், உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்தது. உறுப்புகளை தானம் பெற, 72 மருத்துவமனைகள் பதிவு செய்து உள்ளன. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலிருந்து, உடல் உறுப்புகளை பெறும் வகையில், மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.

வடக்கு மண்டலத்தில், சென்னை, காஞ்சிபுரம், வேலுார், தெற்கு மண்டலத்தில் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், மேற்கு மண்டலத்தில் கோவை, ஈரோடு, சேலம் ஆகிய அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில், உறுப்பு மாற்று சிகிச்சைக்கான கருவிகள் உள்ளன.
சென்னை, மதுரை, கோவை அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்புகளை எடுத்து, பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படுகிறது. வேலுார், திருநெல்வேலி, நாகர்கோவில், ஈரோடு, சேலம் அரசு மருத்துவமனைகளில், இத்திட்டம் முழு செயல்பாட்டில் இல்லை.

மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்தே, உடல் உறுப்புகள் அதிகமாக தானமாக பெற்று, பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2013 மார்ச் வரை, மூளைச்சாவு அடைந்த, 324 பேரின், 1,820 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உள்ளன.

கடந்த 2008 முதல் 2014 ஜூன் வரை, 485 பேரின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உள்ளது. இதில், 79 இதயம், 39 நுரையீரல், 443 கல்லீரல், 867 சிறுநீரகம், ஒரு கணையம், 500 இதய வால்வு,
732 கருவிழி, 5 தோல் என, 2,666 உறுப்புகள், பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டு உள்ளன.
கடந்த 2013 -- 14ல் மட்டும், 141 பேரிடம் பெற்ற, 21 இதயம், 21 நுரையீரல், 130 கல்லீரல், 243 சிறுநீரகம், 1 கணையம், 134 இதய வால்வு, 200 கருவிழி, ஒரு தோல் என, 751 உறுப்புகள் பாதிக்கப்பட்டோருக்கு பொருத்தப்பட்டு உள்ளன.

இந்திய அளவில், உடல் உறுப்பு தானத்தில், தமிழகம் கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலிடத்தை பெற்றுஉள்ளதாக, மருத்துவத் துறை வட்டாரம் தெரிவித்து உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement