Ad Code

Responsive Advertisement

தமிழக அரசின் சார்பில் 2,000 பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டத்தில் சேர, பட்டதாரி இளைஞர்களிடம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசின், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு ஐ.சி.டி., அகாடமி ஆகியவற்றின் சார்பில், பட்டதாரி இளைஞர்கள், 2,000 பேருக்கு, வங்கித் துறை, நிதியியல், சேவை, காப்பீட்டுத் துறை ஆகியவற்றில், குறுகிய காலத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், 150 மணி நேர பயிற்சி வகுப்பாக நடைபெற உள்ளது. இதில் முழுமையாக பங்கேற்று, பயிற்சியில் வெற்றிகரமாக தேர்ச்சி பெறுவோருக்கு, வேலைவாய்ப்பு உதவி கிடைக்க வாய்ப்புள்ளது.கடந்த ஆண்டு, பி.ஏ., பி.காம், பி.பி.ஏ., பி.பி.எம்., பி.எஸ்.சி., எம்.ஏ., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி., ஆகிய பட்டம் பெற்றவர்கள் இப்பயிற்சியில் சேரலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர், www.ictat.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, இம்மாதம் 30ம் தேதி கடைசி நாள்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement