வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு வாரியம் ‘வெயிட்டேஜ்’ முறையை பின்பற்றுகிறது. இந்த வெயிட்டேஜ் முறையின்படி, ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண், அவர்கள் கல்லூரி மற்றும் பிளஸ் 2 ஆகிய படிப்புகளின் பெற்ற மதிப்பெண்ணை கணக்கிட்டு, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மனுதாரர் சார்பில் வக்கீல்கள் சங்கரன், ஆனந்தி உள்பட பலர் ஆஜராகி, கடந்த 2000ம் ஆண்டுக்கு முன்புள்ள தேர்வு முறைக்கும், அதன்பின்புள்ள தேர்வு முறைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளிலும் மதிப்பெண் வழங்குவதில் பெரும் வித்தியாசம் உள்ளது. பழைய முறையில் மனுதாரர்கள் படித்தனர். குறைவான மார்க் பிளஸ் 2 தேர்வில் கிடைத்தது. தற்போது முறையில் படிப்பவர்கள் அதிகமான மார்க் பெற்று விடுகிறார்கள். எனவே அவர்கள் அதிகமான வெயிடேஜ் மார்க் பெற்றுவிடுகிறார்கள். எனவே, வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும் என்று வாதாடினார்கள். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
பின்குறிப்பு - வாதம் நடந்து முடிந்த இவ்வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதக்கருத்துகளை எழுத்துபூர்வமாக வரும் புதன் கிழமைக்குள் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் ஏறத்தாழ 500 பக்க அளவில் தங்கள் வலுவான கருத்துகளை தயாரித்து வருகின்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை