Ad Code

Responsive Advertisement

பள்ளிகளில் "கொடுத்து மகிழும் வாரம்' கடைப்பிடிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

அனைத்துப் பள்ளிகளிலும் அக்டோபர் 2 முதல் 8-ஆம் தேதி வரை "கொடுத்து மகிழும் வாரம்' கடைப்பிடிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், மனதைக் கவர்ந்த ஆசிரியர் பணியினைப் பாராட்டி சிறு கட்டுரையை எழுதுதல், இயலாதவர்களுக்கு பரிசு வழங்குதல், எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்குக் கற்பித்தல்,  கைவினைப்பொருள் உருவாக்கி மற்றவர்களுக்கு வழங்குதல், சாலையைக் கடக்க பிறருக்கு உதவுவதல் என்பன உள்ளிட்ட 18 வகையான நடைமுறைகளை இந்த ஒரு வார காலத்தில் பின்பற்ற பள்ளி கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியிருப்பதோடு, அதுதொடர்பான விவரங்களை இயக்குநருக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement