Ad Code

Responsive Advertisement

கடலூர் தலைமை ஆசிரியர் ரா.நடராஜனுக்கு ’பால சாகித்ய அகடமி’ விருது!

2014-ம் ஆண்டிற்கான ’பால சாகித்ய அகடமி’ விருது கடலூர் தனியார் பள்ளி தலைமை ஆசிரியரும், சிறுவர்களுக்கான பல்வேறு நூல்களை எழுதியுள்ள நூலாசிரியருமான ரா.நடராசனுக்கு  (வயது 50) வழங்கப்பட்டுள்ளது.
பால சாகித்ய அகடமி விருது என்பது சிறுவர் இலக்கியத்திற்காக வழங்கப்படும் சாகித்ய அகடமி விருது. இவர் எழுதிய ’விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்’ தொகுப்பிற்காக இந்த விருது ரா.நடராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கான கதைகள் மட்டுமல்லாமல், கதைகள் மூலம் அறிவியில், கணிதம் உள்ளிட்ட சமூக அக்கறை விஷயங்களை உள்ளிடக்கி பல்வேறு நூல்களை இவர் எழுதியுள்ளார்.  மேலும் கல்வி பற்றிய நிறைய கட்டுரைகள் & புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் மொத்தம் 72 நூல்கள் எழுதியுள்ளார். இதில் 42 நூல்கள் குழந்தைகளுக்கான நூல்கள். இவரது ஆயிஷா என்ற சிறுகதை நூல் மிகவும் பிரபலமானதால், இவருக்கு ஆயிஷா நடராஜன் என்ற பெயர் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நூல் சுமார் 2 லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளனர். சமீபத்தில் மாணவர்களின் வகுப்பறை உளவியல் குறித்து ஆசிரியர்கள் புரிந்து கொள்ளும் வகையில் யாருடைய வகுப்பறை என்ற நூலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூலாசிரியர் இரா.நடராசன் கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். இவரது சொந்த ஊர் திருச்சி லால்குடி. திருச்சி ஜமால்முகமது, செயின் ஜோசப் ஆகிய கல்லூரிகளில் இயற்பியல், ஆங்கில இலக்கணம், உளவியல் ஆகிய மூன்றில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவரது மனைவி மாலாநடராஜன் முதுநிலை கணித ஆசிரியராக பணியாற்றுகிறார். மகன் கெளதமன் பிஇ மூன்றாம் ஆண்டு பயிலுகிறார். மகள் ஆனந்தி 9-ம் வகுப்பு படிக்கிறார்.

இதுகுறித்து ரா.நடராஜன் தினமணி செய்தியாளருக்கு அளித்த பேட்டி: அறிவியல் உண்மைகளையும், கண்டுபிடிப்புகள் வடிவமைப்பையும், மருத்துவ, சுகாதார ஆலோசனைகளை வழங்கும் புத்தகம் விஞ்ஞான விக்கிரமாதித்தன் நூல். நான் எழுதிய ஆயிஷா நூல் பள்ளி மாணவியை பற்றி எழுதப்பட்ட குறுநூலாகும். இதனை குறும்படமாக எடுத்துள்ளனர். பார்வையற்றோம் குழந்தைகள் படிக்கும் வகையில் பூஜ்யமாம் ஆண்டு, நாகா, சர்க்கஸ்.காம் உள்ளிட்ட நூல்கள் பிரபலமானது. இந்த நூல்கள் சுமார் 25 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. எனது நூல்கள் பெருமாலானது பாரதி புத்தகாலயாவின் புக் ஃபார் சில்ரன் என பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான தனது நூல்கள் பயணம் தொடரும் என்கிறார் ரா.நடராஜன்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement