Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளிக்கு பிள்ளைகளைஅனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்

திருச்சுழி அருகே "சஸ்பெண்ட்' செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, கிராமத்தினர் தங்களது பிள்ளைகளை,அப்பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சுழி அருகே ரெங்கையன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. 72 மாணவ, மாணவியர் மற்றும் 6 ஆசிரியர்கள் உள்ளனர். ஆங்கில ஆசிரியர் நீராத்துலிங்கம், ஒழுங்காக பள்ளிக்கு வருவது இல்லை என குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், ஆங்கில பாடத்தில் மாணவர்கள் பின் தங்கியுள்ள நிலையில் இருப்பதை, பெற்றோர்கள், தலைமை ஆசிரியை சுப்புலட்சுமியிடம் புகாராக கூறினர். இதனால், அவர், ஆங்கில ஆசிரியரை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஊர்மக்களும் ஆங்கில ஆசிரியரை கண்டித்துள்ளனர்.

இப்பிரச்னையில், ஜூலை 25 முதல் தங்கள் பிள்ளைகளை அவர்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை. மாவட்ட தொடக்ககல்வி அதிகாரி டென்னிஸ், உதவி தொடக்ககல்வி அதிகாரி இந்திராணி கிராமத்தினரிடம், "ஆசிரியர் மாறுதல் செய்யப்படுவார்' என உறுதி அளித்தனர். இந்நிலையில், ஜூலை 28ல், ஆசிரியர் நீராத்துலிங்கம் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ஆனால், அவரை மாற்றும் வரை தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று ஊர்மக்கள் உறுதியாக கூறிவிட்டனர்.

அதனால், மாணவர்கள் நேற்றும் பள்ளிக்கு வரவில்லை. இதுகுறித்து, உதவி தொடக்ககல்வி அதிகாரி இந்திராணி, திருச்சுழி தாசில்தார் ரெங்கநாதன் பேசினர்.
தாசில்தார் கூறுகையில்"" ஆசிரியரை இடமாற்றம் செய்தால் தான் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என கிராமத்தினர் கூறிவிட்டனர். "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள ஆசிரியர் மீண்டும் வந்து விடுவாரோ என கருதுகின்றனர். அவர் பள்ளி வேலை நாட்களில், 45 நாட்களுக்கு 16 நாட்கள் தான் பணிபுரிந்துள்ளார். அந்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்படுவார். அதுகுறித்து நாளைமறுநாள், மாவட்ட தொடக்ககல்வி அதிகாரி எழுத்துப்பூர்வமாக உறுதி தருவார்,''என்றா

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement