Ad Code

Responsive Advertisement

தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்கு தடை

தனியார் மருத்துவக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கு, உச்ச நீதிமன்றம்
தடை விதித்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்து, இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி தருவதில் தாமதம் ஏற்பட்டது.
கல்லூரிகளில், தேவைக்கேற்ப கட்டமைப்புகளை மாற்றியமைக்கவும், வசதிகளை ஏற்படுத்தவும் கால அவகாசம் அளித்து, மாணவர் சேர்க்கைக் கான அனுமதி தர வேண்டும் என, சுய நிதி கல்லூரிகள் வலியுறுத்தி வந்தன.
இது தொடர்பாக, சுய நிதி கல்லூரிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால், இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்த சுய நிதி கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், ஐந்து மருத்துவக் கல்லூரிகளில், 750 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement