Ad Code

Responsive Advertisement

ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கு தலையணை, கம்பளி சட்டை

 ''அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு தலையணை, கம்பளி சட்டை, ரெயின் கோட் வழங்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட
அறிவிப்புகள்:

கடலூர், நந்தனார் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி வளாகம் மற்றும் திருவள்ளூர், செவ்வாய்ப்பேட்டை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், இரு பொறியியல் கல்லூரிகள், 24.6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை ஆதிதிராவிடர் நல பள்ளி வளாகத்தில், 10 கோடி ரூபாய் செலவில், ஐ.டி.ஐ., அமைக்கப்படும்.
ஆதிதிராவிடர் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு, 4.93 கோடி ரூபாயில், உறையுடன் கூடிய தலையணை அளிக்கப்படும்.
மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு, 3.8 கோடி ரூபாய் செலவில், ரெயின்கோட் மற்றம் கம்பளி
சட்டை வழங்கப்படும்.
பி.எட்., மற்றும் ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற, தனியார் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி
அளிக்கப்படும். இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement