Ad Code

Responsive Advertisement

நேற்று "நீயா?நானா?" - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் VS தனியார் பள்ளி ஆசிரியர்கள்

நேற்று "நீயா?நானா?" - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் VS தனியார் பள்ளி ஆசிரியர்கள் - ஆசிரியர் சமுகத்தில் வேண்டாம் இந்த பிளவு... இதனை  மனதில் வைத்து முகநூலில் பதிவுகளை பதிவிடவும்... அனைவரும் ஆசிரியர்களே.... "நம் கடன் பணி செய்து கிடப்பதே"... 


பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் இடங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்களை   சில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டமாக பார்பதாக சில தனியார் பள்ளி ஆசிரியர்கள் குறை கூறினார்கள்... இது உண்மை எனும் பட்சத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இதனை கருத்தில் கொள்ளவேண்டும்... தனியார் பள்ளி ஆசிரியர்களும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை  100% ரிசல்ட் கொடுக்க முடியாதவர்கள் என முகநூலில் பதிவு செய்தனர்...  தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வித்தியாசம் உண்டு என்பதனை தனியார் பள்ளி ஆசிரியர்கள் உணர்வார்கள் என நம்புகிறோம்... பெரும்பான்மையான அரசுப்பள்ளி மாணவர்கள் பள்ளிநேரதிர்க்கு பின் தன் குடும்பத்திற்காக உழைப்பவர்கள்... அவர்களுக்கு படிபதிற்க்கான நேரம் வெகு குறைவு... தனியார் பள்ளி மாணவர்களைப்போல் பல வெளி உலகு பற்றிய அறிவு அவர்களுக்கு கிடைபதில்லை...அவர்கள் டியூஷன் செல்வதில்லை... இத்தனை தடைகளை தாண்டி அவர்களை 40% மதிப்பெண் பெறவைக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதனை பதிவு செய்கிறோம்... இதனை மீறி 90% மேல் மதிப்பெண் பெரும் மாணவர்களை சில தனியார் பள்ளிகள் அனைத்தும் இலவசமாக அளிக்கிறோம் என அவர்களை அழைத்து செல்கிறார்கள் என்பதனை மறுப்பதிற்கில்லை... 

"இன்றைய தனியார் பள்ளி ஆசிரியர்களே நீங்கள் நாளைய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்"  

அரசுப்பளியில் உள்ள பிரிச்சனைகள் பணிச்சுமை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறோம்... அரசுப்பள்ளி ஆசிரியர்களும் தனியார் பள்ளி ஆசிரியர்களும் சளைத்தவர்கள் இல்லை, தாழ்தவர்கள் இல்லை  என்பதை பதிவு செய்கிறோம்... நாம் அனைவரும் ஒன்றிணைந்து "மாணவர் சமுகம் நாளைய பாரதம்" எனும் தேர் இழுப்போம்... நாம் அனைவரும் ஓர் குடையின் கீழ் இருப்பவர்களே....  - அனைத்திந்திய ஆசிரியர் பேரவை 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement