வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்கான சிறப்பு மையங்கள் திங்கள்கிழமை முதல் செயல்படஉள்ளன.
பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம்தாள் மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43ஆயிரம் பேருக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை ஆசிரியர்தேர்வு வாரியம் ஜூலை 15-ஆம் தேதி வெளியிட்டது. இந்த மதிப்பெண் விவரங்களில் திருத்தம் தேவைப்படுவோர் மாவட்ட வாரியாககுறிப்பிடப்பட்டுள்ள மையங்களில் அந்தந்த நாள்களில் உரிய ஆவணங்களுடன் செல்லலாம். பெயர் மற்றும் பிறந்த தேதியில் மாற்றம் கோருபவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழையும், ஜாதி விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர்வருவாய் அலுவலரிடமிருந்து பெற்றோர் பெயரில் பெறப்பட்ட நிரந்தர ஜாதிச்சான்றிதழையும், "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களில் மாற்றம்தேவைப்படுவோர் அந்தந்த அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். திருத்தம் தேவைப்படாதவர்கள் இந்த மையங்களுக்கு வர வேண்டாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை பங்கேற்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பாகஇந்த மையங்களிலேயே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் எனவும்ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தத் திருத்தங்கள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் சுமார் 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை