பல்வேறு எதிர்பார்ப்புகள் இடையே இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கலானது. ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா நண்பகல் 12 மணியளில் லோக்சபாவில் ரயில்வே பட்ஜெட்டை வாசித்தார். இன்றைய பட்ஜெட்டில் ரயில் பாதுகாப்பு , சுகாதாரம் , நவீனத்திற்கு முக்கியத்துவம் என பல்வேறு முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்டார், 5 ஆண்டுகளில் பேப்பர் இல்லாத ரயில்வே உருவாக்கப்படும் என்றும், ஏ மற்றும் ஏ-1 ரக ஸ்டேஷன்களில் வை-பை நெட் வசதி கிடைக்கப்பெறும் என்றும் , அனைத்து ரயில் நிலையங்களிலும் டிக்கெட் வழங்கும் தானியங்கி கருவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
ரயில்வேயில் தனியார் முதலீடு தொடர்பாக மத்திய அமைச்சக அனுமதியை கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.மும்பை- ஆமதாபாத் இடையே புல்லட் ரயில், ஜெய்ப்பூர்- மதுரை இடையே குளிர்சாதன ரயில் இயக்கப்படும். வேளாங்கண்ணி, மேல்மருவத்தூர் இடையே சிறப்பு ரயில்கள்,ராமேஸ்வரம், வாரணாசி உள்ளிட்ட புனித தலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என பல்வேறு அறிவிப்புக்களை வெளியிட்டார். புதிய ரயில்வே கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்பதன் மூலம் மக்கள் நிம்மதி அடைந்தனர். ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்து அமைச்சர் பேசுகையில்; நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த ரயில்வே துறையை என்னிடம் ஒப்படைத்துள்ள பிரதமர் மோடிக்கு நான் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவரது எதிர்பார்ப்பை நான் முழுவதும் நிறைவேற்றுவேன். மத்திய அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு புதிய ரயில்வே கேட்டு கோரிக்கைகள் வந்துள்ளன. இந்திய பொருளாதாரத்தின் ஆதாரமாக விளங்குகிறது. இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு ரயில்வே நிர்வாகம் அழைத்து செல்வதில் முக்கியத்துவம் பெறுகிறது. ரயில்வே துறை பெரும் சவால்கள் நிறைந்ததாக உள்ளது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன் .இன்னும் ரயில்வே திட்டங்கள் மேம்படுத்த ஒரு ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி வீதம் 10 ஆண்டுகளுக்கு ரூ. 5 லட்சம் கோடி தேவைப்படுகிறது. உலக அளவில் உயர்வு பெறும் வகையில், சரக்கு போக்குவரத்தை உயர்த்த முக்கியத்துவம் அளிக்கப்படும். ரயில்வேயில் பல சவால்கள் காத்திருக்கின்றன. வேகமாக பணியாற்ற தயாராக இருக்கிறோம். புல்லட் ரயில்கள் இயக்க 60 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. ரயில் கட்டண நிர்ணயத்தில் கடந்த காலத்தில் உரிய திட்டங்கள் வகுக்கப்படவில்லை. ரயில் பாதை மேம்பாட்டுக்கு தனியார் ஒத்துழைப்பு தேவை. ஒரு ரூபாய் வரவுக்கு 94 பைசா செலவாகிறது.தனியார் ஒத்துழைப்புடன் நவீன உணவகம் அமைக்கப்படும். தரமற்ற உணவு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மூத்தகுடிமக்களுக்கு பாட்டரி கார் சர்வீஸ் அதிகரிக்கப்படும். ரயில்வேயின் அன்னிய முதலீட்டுக்கு காபினட் அனுமதி கேட்டுள்ளோம். சுகாதாரத்திற்கு 40 சதவீதம் நிதி ஒதுக்கப்படும். சுகாதார பணிகள் காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.கடந்த ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட 99 திட்டங்களில் பல நிலுவையில் உள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன்னர் போட்ட ரயில்வே திட்டங்களில் இன்னும் 4 திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. புதிய திட்டங்கள் அறிவிப்பதை விட அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதே சாலச்சிறந்தது. ஒரு சீட், ஒருபோகி, ஒரு ரயில் பதிவு செய்ய புதிய வசதி உருவாக்கப்படும் என்றும் தெவித்தார்.இவ்வாறு அறிவித்தார். முக்கிய அம்சங்கள் வருமாறு
* வேளாங்கண்ணி- மேல்மருவத்தூருக்கு புதிய ரயில் *
விசாகபட்டனம்- சென்னை இடையே வாரந்திர புதிய ரயில்
* ஆமதாபாத்- சென்னை இடையே எக்ஸ்பிரஸ் ரயில்
* 5 ஆண்டுகளில் பேப்பர் இல்லாத ரயில்வே
* ஸ்டேஷன் வந்ததும் மொபைல் மூலம் பயணிகளுக்கு அலர்ட் வரும்
* ராமேஸ்வரம் உள்ளிட்ட புனிததலங்களுக்கு சிறப்பு ரயில்கள்
* நிமிடத்திற்கு இ டிக்கெட் விநியோகம் 1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தப்படும்
* 4ஆயிரம் பெண்கள் பாதுகாப்பு படையினர் புதிதாக நியமனம். 17 ஆயிரம் ஆண் பாதுகாப்பு வீரர்கள் நியமனம்
* ஆன்லைனில் பிளாட்பார்ம் டிக்கெட் கிடைக்கும் * புதிய கட்டண உயர்வு இல்லை
* புதிதாக 3 ஆயிரத்து 700 கி.மீட்டர் ரயில் பாதை அமைக்க திட்டம்
* வெளிநாட்டு- தனியார் முதலீட்டுக்கு வரவேற்பு
*ரெடி டூ ஈட் உணவு வகைகள் வழங்கப்படும்
* குளிர்சாதன ரயில்களில் சலவை மிஷின்வசதி
*5ஜன்சதாரன்ரயில்கள், 5 பிரிமியம்ரயில்கள்
* 6குளிர்சாதனரயில்கள் *
27 எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்பட 58 ரயிலகள் புதிதாக விடப்படுகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை