Ad Code

Responsive Advertisement

பத்தாம் வகுப்பு மறுகூட்டல்: 450 பேருக்கு மதிப்பெண் மாற்றம்

பத்தாம் வகுப்பு மறுகூட்டலில் 450 பேருக்கு மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் ஏப்ரலில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுதேர்வு முடிவிற்குப் பின் 15 ஆயிரம் மாணவர்கள் பல்வேறு பாடங்களில் மறுகூட்டல் கேட்டு தேர்வுத்துறையிடம் விண்ணப்பித்தனர்.

மறுகூட்டல் முடிவு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று காலை 10:00 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை நேற்று தெரிவித்தது.

விண்ணப்பித்த மாணவர்களில் 450 பேருக்கு மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மற்ற மாணவர்களுக்கு எந்த பாடத்திலும் மதிப்பெண் மாற்றம் இல்லை எனவும் தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.

மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் நாளை (9ம் தேதி) மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்து, புதிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.
  

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement