Ad Code

Responsive Advertisement

பொறியியல் கலந்தாய்வு: தினமும் ஆயிரம் பேர் பங்கேற்பதில்லை: தமிழக அரசு தகவல்

பொறியியல் கலந்தாய்வில் தினமும் 30 சதவீதம் பேர், அதாவது ஆயிரம் பேர் பங்கேற்பதில்லை என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது வால்பாறை தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படுமா என்று அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. எம்.ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்) கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி காலியிடங்கள் அதிகளவில் உள்ளன. மாநிலத்தில் 2.88 லட்சம் இடங்கள் உள்ளன. அவற்றில், அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் 2.11 லட்சமாகும். நடப்புக் கல்வியாண்டில் பொறியியல் கலந்தாய்வு, கடந்த 7-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க 1.60 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. எனவே, அரசு ஒதுக்கீட்டில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளன. கலந்தாய்வில் பங்கேற்க தினமும் 4 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது. ஆனால், அதில் 30 சதவீதம் பேர் அதாவது ஆயிரம் பேர் கலந்தாய்வில் பங்கேற்பதில்லை. கலந்தாய்வில் பங்கேற்பதில் இருந்து அவர்களின் எண்ணங்கள் மாறி விடுகின்றன என்றார் அமைச்சர் பழனியப்பன்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement