Ad Code

Responsive Advertisement

ஆதி திராவிட மாணவர்களுக்கான கட்டணம்: அரசு தரும் வரை தனியார் கல்லூரிகள் வசூலிக்கக் கூடாது: அமைச்சர் பழனியப்பன்

ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு செலுத்தும் வரை, அந்த மாணவர்களிடம் தனியார் கல்லூரிகள் அதை வசூலிக்கக் கூடாது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.

பேரவையில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர் டில்லி பாபு பேசியது:

தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் ஆதி திராவிட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தி வருவது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

ஆனால் பல கல்லூரிகள் ஆதி திராவிட மாணவர்களைக் கல்விக் கட்டணம் கட்டச் சொல்லி வலியுறுத்துகின்றன என்று கூறினார்.

அப்போது உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் குறுக்கிட்டுப் பேசியது:

தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி பெறும் ஆதி திராவிடர் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்துகிறது. இந்த கட்டணத்தை அரசு செலுத்தும் வரை கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளோம் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement