Ad Code

Responsive Advertisement

பள்ளி, கல்லூரிகளில் மொபைல் போன்களுக்கு தடை

நாட்டில் நடக்கும் கற்பழிப்புக்களை குறைக்கவும்,கட்டுப்படுத்தவும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொபைல்போன்களுக்கு தடை போட வேண்டும்என கர்நாடக மாநில எம்.எல்.ஏ.,க்கள் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

சமீப காலமாகநாட்டில் கற்பழிப்பு குற்றம் அதிகரித்து வருகிறது.டில்லி மற்றும் உத்தரபிரதேசம், மும்பை,பெங்களூரூ உள்ளிட்ட நகரங்களில் இளம் பெண்கள் கற்பழிப்புக்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனால்மத்திய அரசு கூட கற்பழிப்பு குற்றம் புரிவோருக்கும் கடும் தண்டனை வழங்கிட சட்ட திருத்தம் செய்தது. இந்நிலையில் கர்நாடக மகளிர் ஆணையம் மாநிலத்தில் உள்ள கல்லூரி, மற்றும் பள்ளிகளில் ஆய்வு நடத்தியது.இதன் அடிப்படையில் பெண்கள் இன்னலுக்குள்ளாதவதற்கு மொபைல் போன் ஒரு காரணமாக அமைகிறது.வீட்டில், பள்ளிகளில் இருக்கும் போது மிஸ்டு கால் கொடுத்து பேச்சு தொடர்கிறது. இது பெரும்கெடுதல்களை ஏற்படுத்துகிறது. இவ்வாறு மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது.

இதனையடுத்து பள்ளி, கல்லூரிகளில் மொபைல் போன்களுக்கு தடை விதிக்க கர்நாடக எம்.எல்.ஏ.,க்கள் குழுவும்பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து இதற்கான உத்தரவு விரைவில் வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி நடக்கும் இந்த மாநிலத்தில் மொபைல் போன் தடைக்கு பெண்கள் நல சமூக ஆர்வலர்கள்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது சம உரிமையை பறிக்கும் செயல் என்றும், எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் மன ஓட்டத்தை மாற்றி கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

முட்டாள்தனமானது: கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் குழு பரிந்துரைத்த முடிவு, முட்டாள்தனமானது என்றும் இதற்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கூறினார் 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement