Ad Code

Responsive Advertisement

தேசிய நெடுஞ்சாலையில் விபத்தா? ரூ.30 ஆயிரம் வரை இலவச சிகிச்சை

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தில் சிக்குவோருக்கு, அருகில் உள்ள மருத்துவமனைகளில், 30 ஆயிரம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை அளிக்கும் திட்டத்தை, மத்திய அரசு துவக்கியுள்ளது.உரிய சிகிச்சை:நாட்டில், சாலை விபத்துகள் அதிகம் நடப்பதும், அவற்றில் உயிர் இழப்புகள் அதிகரிப்பதும், அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கி, பலத்த காயமடைவோருக்கு, உடனடியாக உரிய சிகிச்சை அளித்தால், அவர்களின் உயிரை காப்பாற்றி விட முடியும்.


ஆனால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்களை அனுமதித்தால், சிகிச்சைக்கு தேவையான தொகையை, பெரும்பாலானோரால் செலவிட முடிவது இல்லை. இதனால், உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தில் சிக்குவோருக்கு, இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, மத்திய நெடுஞ்சாலைத் துறை செயலர் விஜய் சிப்பர் கூறியதாவது:விபத்தில் சிக்கும் ஒவ்வொருவருக்குமே, அடுத்த, 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது. இந்த அவகாசத்துக்குள், சிறப்பான சிகிச்சை அளித்தால், பலரை காப்பாற்றி விட முடியும். இதற்காகவே, விபத்தில் சிக்கியோரின் சிகிச்சைக்கு உதவும் திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த திட்டத்தின்படி, விபத்தில் சிக்கியோரை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால், சிகிச்சைக்காக உடனடியாக, அவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 30 ஆயிரம் ரூபாய் வரை, இலவசமாக சிகிச்சை பெறலாம்.

ரூ.600௦௦ கோடி:முதல் கட்டமாக, குர்கான் - ஜெய்ப்பூர் இடையிலான நெடுஞ்சாலை பாதையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படிப்படியாக, நாடு முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக, 600 கோடி ரூபாய் வரை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங்களின் உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement