Ad Code

Responsive Advertisement

TNTET:ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு 'கெடு!': அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 'பாஸ்' ஆக வேண்டும்.

கடந்த, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற விதிக்கப்பட்ட, 5 ஆண்டு காலக்கெடு, அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது.

தனியார் பள்ளிகளில் பணியாற்றும், 1 லட்சம் ஆசிரியரில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், டி.இ.டி., தேர்வை முடிக்காமல் பணியாற்றுவதால், அவர்களின் வேலை, கேள்விக்குறியாகி உள்ளது.

டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி முந்தைய காங்கிரஸ் அரசு, 2009ல், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. அதில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள், டி.இ.டி.,தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.இது தொடர்பான அறிவிப்பை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், 2010, ஆகஸ்ட், 23ல் வெளியிட்டது. அறிவிப்பு வெளியான தேதியின் அடிப்படையில், யார், யார் டி.இ.டி.,தேர்வை எழுத வேண்டும்; யார் எழுத தேவையில்லை என்ற விளக்கத்தை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), கடந்த, 2012, மே, 28ல் வெளியிட்டது.

*அதன்படி, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், பணி நியமன அறிவிப்பு வெளியாகி, பணியில் சேர்ந்த ஆசிரியர் அனைவரும் (இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்), டி.இ.டி., தேர்வை கட்டாயம் எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என்றும்,இதற்கு, 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

*மேற்குறிப்பிட்ட தேதிக்கு முன், அறிவிப்பு வெளியாகி, குறிப்பிட்ட தேதிக்குப்பின், பணி நியமனம் பெற்றவர்களும், மேற்குறிப்பிட்ட தேதிக்கு முன், அறிவிப்பு வெளியாகி, பணி நியமனமும் பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.

*புதிய ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்ச்சிக்குப் பிறகே, பணி நியமனம் செய்யப்படவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட, 5 ஆண்டுகள் கால அவகாசம், அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது.

இந்நிலையில், 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர்பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்றுள்ளனரா என்ற விவரம், கல்வித் துறையிடம் இல்லை. எனினும், தனியார் பள்ளிகளில் பணியாற்றும், 1 லட்சம் ஆசிரியரில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், டி.இ.டி., தேர்வில்தேர்ச்சி பெற வேண்டிய நிலையில் இருப்பதாக, கல்வித் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement