Ad Code

Responsive Advertisement

'எய்ட்ஸ்' பாதித்த சிறுமியரை பள்ளியில் சேர்க்க எதிர்ப்பு

கோவாவில், 'எய்ட்ஸ்' பாதித்த பள்ளிச் சிறுமியரை பள்ளியில் சேர்க்க, அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவிப்பதால், 13 சிறுமியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.கோவா மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர், மனோகர் பாரிக்கர் தலைமையிலான அரசு உள்ளது. இங்குள்ள, ரிவோனா என்ற இடத்தில், அனாதை குழந்தைகளை பராமரிக்கும் மையம் உள்ளது. அங்கு, எச்.ஐ.வி., நோய் பாதித்த சிறுமியர், 13 பேர் உள்ளனர். கிறிஸ்தவர்கள் நடத்தும் அந்த மையத்திலேயே படித்து வந்த சிறுமியரை, அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க, அந்த மைய நிர்வாகிகள் முடிவு செய்து, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.


இதை அறிந்த, அந்த பள்ளியில் படிக்கும் பிற மாணவர்களின் பெற்றோர், 'எய்ட்ஸ் பாதித்த சிறுமியரை, எங்கள் குழந்தைகளுடன் சேர்த்து படிக்க வைக்கக் கூடாது' என, எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், எய்ட்ஸ் நோய் பாதித்த சிறுமியரை, பள்ளியில் சேர்க்க, பள்ளி நிர்வாகம் மறுத்தது. எதிர்ப்பு தெரிவித்த பெற்றோருடன், பள்ளி நிர்வாகம் பேச்சு நடத்தியும், அவர்கள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர். இதனால், அந்த சிறுமியரின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு ஒன்றில், 'எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை பாரபட்சமாக நடத்தக் கூடாது; அந்தக் குழந்தைகளை, பிற குழந்தைகளுடன் சேர்ந்து படிக்கச் செய்ய வேண்டும்; அவர்களுக்கும் கல்வி பெறும் உரிமைச் சட்டம் செல்லுபடியாகும்' என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement