Ad Code

Responsive Advertisement

வரும் நிதியாண்டில் அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப்: எம்எல்ஏ தகவல்

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் காமாட்சி என்ற காந்தி தலைமை தாங்கினார். நாகம்பட்டி பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். பசுவந்தனை பள்ளி தலைமை ஆசிரியர் சூலியனடெய்சிமேரி வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 76 மாணவ–மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:–

பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப், சைக்கிள், சீருடை உட்பட பள்ளிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுவது உலகத்திலேயே எந்த நாட்டிலும் கிடையாது. தமிழக முதல்வர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப் டாப் வழங்குவதற்காக ரூ.1850 கோடியை ஆண்டு தோறும் வழங்கி வருகிறார். இந்த லேப் டாப்பை மேல் கல்வி படிப்பிற்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும். வரும் நிதியாண்டில் அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement