Ad Code

Responsive Advertisement

அண்ணாமலை பல்கலையில் கவுன்சிலிங் துவங்கியது

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், இன்ஜினியரிங் மாணவர்களுக்கான முதல் நாள் கவுன்சிலிங்கில், 984 பேர் விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்தனர்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், இன்ஜினியரிங் மாணவர்கள் சேர்க்கைக்கான, இருநாள் கவுன்சிலிங், நேற்று துவங்கியது. 2,545 விண்ணப்பங்கள் வந்த நிலையில், தகுதி இல்லாதவை மற்றும் வெளிமாநில மாணவர்கள் விண்ணப்பம் என, நீக்கப்பட்டு, 2,150 மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
முதல் நாளான நேற்று, 984 பேர் பங்கேற்று, விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்தனர்.இதில், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் சிவராமகிருஷ்ணன், கவுன்சிலிங் 'கட் - ஆப்' 191.25 மதிப்பெண் எடுத்து முதலிடத்தையும், துர்கா தேவி இரண்டாமிடத்தையும், லோகேஷ்குமார் மூன்றாமிடமும் பிடித்தனர்.வேளாண்மை படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு, வரும் 14ம் தேதி துவங்கி, 16ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement