Ad Code

Responsive Advertisement

இலவசத்திற்காக கையேந்தாத நிலை வேண்டும் என்பதே முதல்வரின் கனவு

"இலவசத்திற்காக மக்கள் கையேந்தாத நிலை ஏற்பட வேண்டும் என்பது முதல்வர் ஜெயலலிதா கனவு," என, மதுரையில் இலவச பொருட்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் செல்லுார் ராஜூ பேசினார்.

மதுரை மாநகராட்சி 67 வது வார்டில் இலவச மிக்ஸி, கிரைண்டர், பேன் வழங்கும் விழாவிற்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. முஸ்லிம் சமுதாய மக்கள் கோரிக்கையை ஏற்று, உள்ஒதுக்கீட்டை கொண்டு வந்த ஜெ., கல்விக்காக ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கினார். அ.தி.மு.க.,வில் யார் தப்பு செய்தாலும் அவர்கள் தப்ப முடியாத நிலை உள்ளது. மக்கள் யாரும் இலவசத்திற்காக கையேந்தக் கூடாது என்ற நிலை ஏற்பட வேண்டும் என்பது முதல்வரின் கனவு, என்றார். கலெக்டர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சிறப்பு திட்ட செயலாக்கத் துறை துணை கலெக்டர் கிரிஜாதேவி வரவேற்றார். டில்லி சிறப்பு பிரதிநிதி ஜக்கையன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement